வேளாண் ஆராய்ச்சியில் புதுமைகளை புகுத்த வேண்டியது அவசியம்! - மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌகான் வலியுறுத்தல்
வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் புதுமைகளை புகுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார். கடந்த 29.04.2025 அன்று புது டில்லியில் நடைபெற்ற இக் கூட்டத்தில், மத்திய அமைச்சர். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களால் நடத்தப்படும் ஆராய்ச்சி பரிசோதனைகள் பற்றிய தகவல்களைப் பெற்று, எதிர்கால உத்திகள் குறித்த விரிவான வழிகாட்டுதலையும் அவர் வழங்கினார்.
அவரது உரை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Agricultural Research) முன்னெடுக்க வேண்டிய முயற்சிகளின் சாராம்சம் :
1. மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின் ( 2025-26) கீழ்க்காணும் நான்கு முக்கிய அறிவிப்புகளில் விரைவான முன்னேற்றத்துடன் பணியாற்ற வேண்டும் - பருப்பு வகைகளில் தன்னிறைவு , அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய செயல் நோக்கம் , பருத்தி உற்பத்திக்கான செயல் நோக்கம் , பயிர்களின் மூலக்கூறு மரபணு வங்கி ஆகியவை இதில் அடங்கும்.
2.
திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு ஆராய்ச்சி மற்றும் புதுமைகள் விவசாயத் துறையின் முக்கிய தூண்களாகும்
3.
காரீஃப் விதைப்பின் போது சோயாபீன் பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்
4.
கோதுமை மற்றும் அரிசியுடன் பருப்பு வகைகள் , எண்ணெய் வித்துக்கள் , பருத்தி மற்றும் இதர
தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
5.
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடியின் தீர்மானத்தின்படி,
ஒருமுகப்படுத்தப்பட்ட
உத்தியின் கீழ் இயற்கை விவசாயத்தை பிரபலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
6.
மண்வள அட்டையை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் ;
விவசாயிகள்
உரங்களின் சரியான பயன்பாடு குறித்த தகவல்களைப் பெற வேண்டும்
7.
கடைசி வரிசை விவசாயி எப்போது வளமானவராக மாறுகிறாரோ , அப்போதுதான்
உண்மையிலேயே வளர்ந்த இந்தியா என்ற உறுதி நிறைவேறும்
8.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி கள் நல்ல தரமான விதைகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்து அர்ப்பணிப்புடன் பணியற்ற வேண்டும்
9.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகள் சிறு விவசாயிகளைச் சென்றடைய வேண்டும்
10.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சிறு விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை விரைவாக வழங்க வேண்டும்.
இக்கூட்டத்தில் அவர், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற விவசாயம் , சிறு விவசாயிகளுக்கான மாதிரி பண்ணைகளை உருவாக்குதல் , மாநில அரசுகளுடன் இணைந்து இயற்கை விவசாயத்தின் பொருட்களை சான்றளிப்பதற்கான ஏற்பாடு , விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புடன் சிறு விவசாயிகளை இணைக்கும் முயற்சிகள் , மீன்வளம் , தேனீ வளர்ப்பு , தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல் , இயற்கை விவசாயத்திற்கான சிறப்பு வகை விதைகளை உற்பத்தி செய்தல் , வறண்ட மானாவாரி விவசாய மேலாண்மையில் ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்றுதல் , மண் சுகாதார அட்டை மற்றும் விவசாயிகளின் தேவைகளை இணைப்பதன் மூலம் பணியாற்றுதல் , மூங்கில் சாகுபடி மற்றும் காலநிலை பாதுகாப்பு திசையில் மரங்களை வளர்க்க விவசாயிகளை ஊக்குவித்தல், மண் பரிசோதனை கருவி , தொழில்நுட்பத்தின் தாக்கத்தின் உண்மையான மதிப்பீடு , விவசாயிகளின் சரியான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு , அரசு சாரா நிறுவனங்களின் பங்கேற்பு உட்பட வேளாண் அறிவியல் மையத்தின் (KVK) பங்கை திறம்படச் செய்தல் போன்ற தலைப்புகளில் விரிவான கருத்துக்களை முன்னிலைப் படுத்தி, தேவையான அறிவுரைகளை மத்திய அமைச்சர் வழங்கினார் .
இக்கூட்டத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் டைரக்டர் ஜெனரல் மற்றும் துணை டைரக்டர் ஜெனரல்கள் அனைவரும் பங்கேற்றனர் .
No comments:
Post a Comment
Comments and Suggestions
Note: only a member of this blog may post a comment.