New Book on "Improving Sugarcane Productivity in Tamil Nadu and Puducherry" released - see blog post for details! Sugarcane@100: August 2025

100 Glorious years of Sugarcane Breeding Institute

Monday, 4 August 2025

 

'Sugarcane Farming for Prosperity' - Tamil book launched!

வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி – நூல் அறிமுகம்!




·                  இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் , சமீபத்தில் வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளது .

·                  13 அத்தியாயங்கள் அடங்கிய இக்கையேட்டில் கரும்பு இரகங்கள், தரமான கரும்பு விதை உற்பத்தி , நீர் மற்றும் உர மேலாண்மை , இயந்திரங்கள் ,நோய் மற்றும் பூச்சி மேலாண்மை போன்ற கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

·                  இது தவிர, திசு வளர்ப்பு நாற்று உற்பத்தி, கரும்பிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், கரும்பு விவசாயிகளுக்கான தகவல் பரிமாற்ற வழிமுறைகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

·                  நூலில் உள்ள வண்ணப் படங்களும் , பெட்டிச்செய்திகளும் வாசகர்களின் ஈர்ப்பை அதிகரித்து , தகவல்கள சிறப்பாக விளக்க உதவுகின்றன. 

·                  விவசாயிகள் மட்டுமின்றி, விரிவாக்கப் பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இக்கையேடு மிகுந்த பலனளிக்கும்.

 

நூலின் பெயர்: வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி  முதற்பதிப்பு  : 2025

தொகுப்பாசிரியர்  : முனைவர் D புத்திர பிரதாப்

பதிப்பாளர்  : முனைவர் P கோவிந்தராஜ் , இயக்குநர்,

ICAR- கரும்பு இனப்பெருக்கு நிறுவனம்,

கோயம்புத்தூர் – 641 007,

தொலைபேசி : 0422 – 2472621 - 238;

மின்னஞ்சல்  : sbikrishi@gmail.com

பொருள் : வேளாண் தொழில்நுட்பம்  

நூலின் அளவு : 140  X 210 மிமீ

ISBN : 978-93-85267-45-1

மொத்த பக்கங்கள் : 224

விலை : ரூ. 170/= (நூற்றி எழுபது மட்டும்)

 

 

 

·        வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி கையேட்டுபிரதிகளை பெறுவதற்கு  ரூ 170 – ஐ (உள்நாட்டு தபால் செலவு உட்பட) பாரத ஸ்டேட் வங்கி, வீரகேரளம் ,: Account Name: ‘ICAR UNIT – SBI’ ; Account Number: 10663184080 ; IFSC No. of Bank: SBIN0010618 என்ற எண்ணுக்கு அனுப்பிவிட்டு , பணப் பரிமாற்ற விவரங்களையும் , தங்களது விவரங்களையும் directorsbiicar@gmail.com ; sbilibrary@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 நேரிலும், நிறுவன நூலகத்தில் கிடைக்கும்.